மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீ.சி. மைதான ஓரத்தில் உயிரிழந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
செங்கலடி – கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த பிள்ளையான் காணேசமூர்த்தி (வயது 69) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டிலிருந்து ஆறு நாட்களுக்கு முன்னர் வெளியேறிச் சென்றுள்ளார் என்று பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews