ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தரவின் இராஜினாமாக் கடிதத்தை ஏற்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்துவிட்டாரென அறியமுடிகின்றது.
ஜனாதிபதி செயலாளர் பதவி விலக வேண்டும் என ஆளுங்கட்சியில் உள்ளவர்களே வலியுறுத்த தொடங்கினர். பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட விடயங்களுக்கு இவரே காரணம் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில் சிங்கப்பூர் சென்று நாடு திரும்பிய ஜனாதிபதியிடம் அவர் இராஜினாமாக் கடிதத்தை கையளித்துள்ள போதிலும், அதனை ஏற்க ஜனாதிபதி மறுத்துவிட்டரென அறியமுடிகின்றது.
#SriLankaNews