இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமரை வரவேற்கும் முகமாக வீதிகளில் கட்டப்பட்டு இருந்த பதாகைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் எரிக்கப்பட்டன.
யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் முகமாக பல நிகழ்வுகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் பிரதமரின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்திற்க்கு வருகை தந்துள்ள பிரதமர், மட்டுவில் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்தார்.
குறித்த போராட்டத்தில் கலந்துகொள்ள முல்லைத்தீவில் இருந்து பேருந்தில் வந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டுவில் அம்மன் ஆலயத்திற்கு அருகில், பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையிலேயே பிரதமரை வரவேற்கும் முகமாக வீதிகளில் கட்டப்பட்டு இருந்த பதாகைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் எரிக்கப்பட்டன.
இதேவேளை யாழில் இருந்து சென்ற வேலன் சுவாமிகள் உள்ளிட்டோரை மட்டுவில் வண்ணாத்தி பாலம் பகுதியில் தடுத்து நிறுத்திய பொலிஸார் அவர்களையும் வாகனத்தில் இருந்து இறங்காதவாறு தடுத்து நிறுத்தி இருந்தனர்.
நிகழ்வு முடிந்து பிரதமர் நிகழ்விடத்தில் இருந்து புறப்பட்டதும் , போராடகாரர்கள் குறித்த பகுதிக்கு செல்வதற்கு பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, வாகனத்தில் இருந்து இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் , பிரதமரை வரவேற்று கட்டப்பட்டு இருந்த பதாகைகளை கிழித்து , தீயிட்டு எரித்து தமது எதிர்ப்பினையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்தினர்.
#SriLankaNews