நாடாளுமன்ற உணவு விடுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சோற்று பொதியின் விலை 100 ரூபாவினாலும், ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் சோற்று பொதியின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கான சோற்றுபொதியின் விலை ரூ.200 ஆக இருந்தது. புதிய விலை திருத்தத்தின்படி ரூ.300 ஆக உயரும்.
பாராளுமன்ற ஊடகவியலாளர் ஒருவரின் உணவுக்காக இதுவரை செலவிடப்பட்ட தொகை நூறு ரூபாவாக இருந்த நிலையில் அது 150 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு நாடாளுமன்ற உணவு விடுதியில் இருந்து உறுப்பினர்கள் உட்பட பல்வேறு குழுக்களுக்கு வழங்கப்படும் உணவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் உணவு மற்றும் பல்வேறு பானங்களுக்காக சுமார் 15 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
#srilankanews