ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு – மூடப்பட போகும் பல அரச நிறுவனங்கள்!

anura kumara

பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் மூடும்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஒரே அமைச்சின் கீழ் அல்லது வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே நோக்கத்திலான பல்வேறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
இதன் மூலமாக, திட்டங்களைச் செயல்படுத்துவதில் செயல்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவ்வாறான நிறுவனங்களைத் தொடர்ந்து பராமரிப்பதால், அரசாங்கம் கூடுதல் செலவுச் சுமையை ஏற்க வேண்டியுள்ளமையினையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version