ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அனைத்து ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலையேற்றம் மற்றும் நாளை நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாடு என்பன தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.
அதேவேளை, ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.
#SriLankaNews