சுகாதார அமைச்சு பரிந்துரைத்தால் நாட்டை முடக்குவோம்- அரசு அறிவிப்பு!!

சுகாதார அமைச்சு பரிந்துரைத்தால் நாட்டை முடக்குவோம்- அரசு அறிவிப்பு!!

சுகாதார அமைச்சு பரிந்துரைத்தால் எந்த நேரத்திலும் நாட்டை முடக்குவோம் என்று அரசு தெரிவித்துள்ளது.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார்.

நாட்டை மூடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இல்லை என்று அவர் கூறினார்.

கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்கும் முடிவை அரசு எடுக்காவிட்டால், அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து துறைகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று தொழிற்சங்கங்கள் அரசை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version