” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றலாம். அதற்கான கதவுகள் திறந்தே உள்ளன.”
இவ்வாறு ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானியும், ஜனாதிபதியின் பாதுகாப்பு விவகார ஆலோசகருமான சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு திரட்டுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளனவா என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாம் தமிழ்க்கட்சிகளும் பேச்சு டத்திக் கொண்டிருக்கிறோம். சம்பந்தன், சுமந்திரன் ஆகியோருடனும் விக்னேஸ்வரனுடனும் பேசி வருகிறோம். எமது கதவு அனைவருக்கும் திறந்திருக்கிறது. ஏனெனில் இது நாட்டை முன்நிறுத்தி யோசிக்க வேண்டிய காலம். தமிழ்க்கட்சிகள் எம்முடன் இணைந்து பணியாற்றுவதில் எம் தரப்பில் எந்தத் தடையும் இல்லை. பேச்சு மூலம் தடைகளைக் கடந்து பிரச்சினைகளுக்கு முடிவு காண முடியும் எனக் கருதுபவரே எமது ஜனாதிபதி. இது நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் என்பதை எவரும் மறந்துவிடலாகாது.” – என்றார்.