கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அமைப்பு இன்று (09) காலை 9.00 மணியளவில் செயலிழக்கப்பட்டதுடன், திணைக்கள அதிகாரிகளால் பிற்பகல் 1.00 மணியளவில் அதனை மீண்டும் செயற்படுத்த முடிந்தது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் இயங்கி வந்த இந்த கணனி அமைப்பு நேற்றும் இன்றும் (08) திடீரென செயலிழக்கப்பட்டது.
#SriLankaNews