இலங்கையின் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், தற்போது அது 17.5 வீதத்தை எட்டியுள்ளது.
இலங்கை வரலாற்றில் பதிவான அதிக பணவீக்க நிலைமை இதுவாகும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 16.8 வீதமாக இருந்த பணவீக்கம், பெப்ரவரியில் 17.5 வீதமாக அதிகரித்துள்ளது. இம்மாதம் மேலும் அதிகரிப்பைக்காட்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் தற்போதைய சூழ்நிலையில் அதிக பணவீக்கம் உடைய நாடாக இலங்கை கருதப்படுகின்றது.
ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டுவருவதுடன், டொலரின் பெறுமதியும் அதிகரித்து வருகின்றது. மறுபுறத்தில் பொருட்களின் விலைகளும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews