இன்று முதல் இரவு ஊரடங்கு அமுல்!!!

cur

இன்று முதல் இரவு ஊரடங்கு அமுல்!!!

நாட்டில் இன்று இரவு முதல் நாளாந்தம் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் இந்த நேரங்களில் பயணிக்க முடியும் என கொவிட் ஒழிப்பு செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

அத்துடன், மக்கள் ஒன்றுகூடும் அனைத்து வகையான விடயங்களுக்கும் நேற்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் ஒரே சந்தர்ப்பத்தில் 50 வீதமானோர் மாத்திரமே உட்செல்ல முடியும்.

நாளை நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை திருமண நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version