இஞ்சி செய்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

ginger

ஏற்றுமதி விவசாயத் திணைக்களம், இஞ்சி அழுகல் நோய் குறித்துக் கவனம் செலுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது.

குறிப்பாக நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது வர்த்தகப் பயிரான இஞ்சி, குருணாகல், கண்டி, மாத்தளை, அம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் 2,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தமயந்தி சமரசிங்க தெரிவித்துள்ளதுடன், ஏற்கனவே இந்த நோய் தொற்றியிருந்தால், அதுபோன்ற புதர்களை எரித்து அழிக்குமாறு அவர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

Exit mobile version