IMG 9409 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் இழுவை மடி: நாடாளுமன்றில் நிறைவேறிய பிரேரணையினை சுமந்திரன் மாற்றித்தர வேண்டும்!

Share

உள்ளூர் இழுவை மடி தொடர்பில் நாடாளுமன்றில் நிறைவேறிய பிரேரணையினை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சட்ட மூலமாக மாற்றித் தரவேண்டுமென குருநகர் கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தின் ஆலோசகர் ம. இமானுவல் தெரிவித்தார்.

இன்று குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தில் 400 இழுவை மடி தொழிலாளர்களும் 200 சிறு படகு தொழிலாளர்கள் மற்றும் 100 தூண்டில், கடலட்டை தொழில் செய்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் உள்ளனர் .

கடந்த 45 வருடங்களாக எமது கடற்பரப்பில் இந்த இழுவை மடி தொழிலினை குருநகர் மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

நாம் ஏனைய கடற்றொழில் புரிபவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே  இழுவைமடி தொழிலை காலங்காலமாக மேற்கொண்டு வருகிறோம்.

எமது கண்டல் பிரதேசத்தில் தான் இந்திய இழுவைப் படகுகளும் தொழிலை மேற்கொண்டு வருகிறார்கள்.

எனவே இது தொடர்பில் இழுவை மடி தடை சட்டமூலத்தை கொண்டுவந்த நாடாளுமன்ற உறுப்பினர், தமிழரசு கட்சியின் தலைவர்,முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருடன் இந்த சட்டத்தை கொண்டு வந்தால் எமது தொழில் பாதிக்கப்படும்.

எமது வாழ்வாதாரம் முற்றுமுழுதாக பாதிக்குமென பலமுறை பேசியிருந்தோம்.

எனவே இழுவை மடி தடை சட்டமானது இந்திய இழுவைமடி தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் முகமாகவே கொண்டு வரப்பட்டது.

இது உள்ளூர் மீனவர்களுக்குத் தடைச் சட்டம் பொருந்தாது. உள்ளூர் மீனவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் “நாரா” நிறுவனத்தினரால் எமது பகுதியில் ஆய்வு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு அறிக்கை கடற்தொழில் நீரியல் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

IMG 9412

யாழில் இரண்டு இடங்கள் அடையாளமிடப்பட்டு அந்த இடங்களில் மாத்திரம் தொழில் செய்ய அனுமதிக்கப்படும்.

அடையாளப்படுத்தப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் தொழில் புரிந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நீரியல் வளத் திணைக்களத்தினரால் அறிவுறுத்தப்பட்டது.

தற்போது நாங்கள் கடல் வளத்துக்கோ சுற்றுச்சூழலுக்கோ ஏனைய தொழில்களுக்கோ பாதிப்பில்லாத வகையிலே எமது இழுவை மடி தொழிலை வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மற்றவர்களுக்கு இடையூறு இல்லாது மேற்கொண்டு வருகின்றோம்.

எனவே சுமந்திரன் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியான நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையினை சட்டம் மூலமாக மாற்றித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...