மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளியொருவர் வாங்கிய உணவுப்பொட்டலத்தில் பல்லியொன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது
இது குறித்து, புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.
இந்தநிலையில், குறித்த சிற்றுண்டிச்சாலையினைத் தறிகாலிமாக மூடுவதற்கான உத்தரவினை நீதிபதி விடுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.
#SrilankaNews