“பதவிக்காக ஆளுந்தரப்பின் கால்களை கழுவி பிழைக்க வரவில்லை” – சிறிதரன் – டக்ளஸ் சபையில் மோதல்!

Sritharan 1

” நான் அரசுக்கு வக்காளத்து வாங்கும் கையாள் அல்லன். பதவிக்காக ஆளுந்தரப்பின் கால்களை கழுவி பிழைக்கவும் வரவில்லை. எனவே, தயவுசெய்து என்னை பேசவிடுங்கள்.”

இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சபையில் வைத்து பதிலடி கொடுத்தார் சிறிதரன் எம்.பி.

நாடாளுமன்றத்தில் இன்று சிறிதரன் எம்.பி. உரையாற்றுகையில், அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் சிறிதரன் எம்.பியின் உரையை குறுக்கீடு செய்த டக்ளஸ்,

” மஹிந்த ராஜபக்ச காலத்தில் வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். அதற்கு முன்னரும் நாம் செய்திருப்போம். ஆனால் நீங்கள் செய்யவிடவில்லை. பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார். இது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அல்லது நீங்கள் மறைக்கலாம்.” – என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே பதவிகளுக்காக கால் கழுவி பிழைப்பதற்காக தான் அரசியல் நடத்தவில்லை என சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார்.

போர் காலத்தில் வடக்கு மக்களுக்கான பொருட்கள் விநியோகத்தையும் டக்ளஸே தடுத்தார் எனவும் சிறிதரன் எம்.பி. சீறினார்.

அத்துடன், டக்ளஸின் சகாவான திலீபனும், சிறிதரன் எம்.பி., மலையக மக்களை இழிவுப்படுத்தியவர் என விமர்சித்து, டக்ளசுக்காக குரல் கொடுத்தார்.

#SriLankaNews

Exit mobile version