நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை!

sri lanka bus 1

நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை!

தமக்கு தகுந்த நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பஸ் சேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், சேவையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும், சேவையாளர்களுக்கும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துக்கு முன்னர் நிவாரணம் வழங்கப்படாவிட்டால் சட்டநடவடிக்கை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Exit mobile version