78
செய்திகள்உலகம்

இருளில் மூழ்கிய லெபனான்

Share

லெபனானில் கடந்த இரு ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.

இந்த பொருளாதார நெருக்கடியால் அங்கு எரிபொருள் பற்றாக்குறை நீடித்து வருகின்றது.  இதன் காரணமாக லெபனான் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அங்குள்ள அனைத்து பிரதான மின் உற்பத்தி நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மின் உற்பத்தி நிலையங்களை இயக்க போதிய எரிபொருள் இல்லாது மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மின்சாரப் பற்றாக்குறையும் ஏற்பட்ட நிலையில் லெபனான் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கி சிக்கித் தவிக்கின்றது.

அங்குள்ள மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழங்கும் இடங்களில் கூட மின்சாரம் இன்மையால் நோயாளிகள் மற்றும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர் என அங்கு கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில இடங்களில் டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.

எனினும் இந்த மின்தடை லெபனானில் பல நாகள் நீடிக்க வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...