முதலாம் வகுப்புக்கான கற்றல் நடவடிக்கை ஏப்ரலில் ஆரம்பம்!

grade one students

முதலாம் வகுப்புக்கான கற்றல் நடவடிக்கைகள் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நேற்றைய தினம் கண்டியில் உரையாடும் போதே இவர் இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவுபெறும் பாடசாலை தவணைகள் மீண்டும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும்.

அத்தோடு ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் 5 தர புலமைப்பரிசிலும், பெப்ரவரி மாதம் க.பொ.த உயர்தரப் பரீட்சையும், மே மாதத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையும் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Exit mobile version