check afp sri lanka politician shot dead inside office 68f9b44b44c76 600
செய்திகள்இலங்கை

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை: சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தகவல்!

Share

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலைக்குக் காரணமான சந்தேகநபர்கள் குறித்துத் தகவல் கிடைத்திருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (அக்டோபர் 23, 2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், சந்தேகநபர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர, நேற்று முன்தினம் (அக்டோபர் 22) பிரதேச சபை அலுவலகத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது படுகொலை தொடர்பான விசாரணையை 4 பொலிஸ் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...