நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்ற நிலையில், அதில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், இறுதி ஊர்வலத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை சாரதியான, அச்சுவேலி நாவற்காட்டை சேர்ந்த தியாகராஜா மதனபாலன் (வயது-40) நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
இவர் வடமராட்சி அல்வாயில் திருணம் செய்திருந்தார். இவரது உடல் அல்வாயில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் அச்சுவேலிக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டிருந்தனர். இவர் செலுத்திவரும் இ.போ.ச. பேருந்தும் இறுதி ஊர்வலத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பெரும் எண்ணிக்கையானோர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Leave a comment