கண்டி, ஹுன்னஸ்கிரிய நகருக்கு அருகாமையில் இன்று (18) காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதுடன், மூன்று வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
பிரதேசத்தில் நிலவி வரும் கடும் மழை காரணமாக இன்று காலை இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மண்சரிவினால் அப்பகுதியில் உள்ள 3 வீடுகள் முற்றாக அல்லது பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் நிலவும் மேலதிக மண்சரிவு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, அருகிலுள்ள பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த 90 குடும்பங்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.