கேரளத்தில் நிலச்சரிவு-32 பேர் சாவு

CFCHFHH

Kerala

கேரளத்தில் இடம்பெற்ற நிலச்சரிவால் இதுவரை 35 பேர் சாவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா கேரளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.

திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம் மாவட்டங்களில் கனமழை பதிவாகியுள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இதுவரை கனமழையால்  உருவான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் சாவடைந்ததாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது சாவு எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது.

தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம் இன்னும் குறையாததால் அதிகப்படியான மழை பதிவாகி வருகிறது.

குறிப்பாக இடுக்கி மாவட்டத்தின் பல பாலங்கள் நீரில் மூழ்கியிருப்பதால் பேரிடர் மீட்புப்குழுவினர் அப்பகுதி மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.

மீட்புப்குழுவினர்  100-க்கும் மேற்பட்ட முகாம்களை அமைத்து மீட்புப்பணிகள் தொடர்ந்து வருகிற நிலையில் கனமழையால் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மீட்புப்படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Exit mobile version