கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை கீரிமலையில் முறியடிப்பு

கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை கீரிமலையில் முறியடிக்கப்பட்டுள்ளது.

பொத மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு வெளியிட்டமையைத் தொடர்ந்து இந்நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

காணி உரிமையாளரின் ஒப்புதல் இன்றி, கீரிமலை நகுலேஷ்வரம், ஜே/226 கிராம சேவகர் பிரிவில் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் நில அளவை திணைக்களத்தினால் திட்டமிடப்பட்டிருந்தது.

kirimalai

இருப்பினும் அங்கு ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மாற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்நடவடிக்கையினை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு செல்வதாக கூறிவிட்டு, நில அளவைத் திணைக்களத்தினர் அவ்விடத்தில் இருந்து சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Exit mobile version