image 7582b14241 696x391 1
செய்திகள்இலங்கை

கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடு அராஜக நிலையை நோக்கிச் செல்கிறது – தயாசிறி ஜயசேகர கடும் எச்சரிக்கை!

Share

 

நாட்டில் ஒரு மாத காலமாக கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) நியமிக்கப்படாததால், நிதி ஒழுக்கம் சீர்குலைந்து நாடு பாரதூரமான அராஜக நிலையை நோக்கிச் செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (08) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் அவர் கடந்த ஒரு வருடமாக பதில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரே கடமையாற்றி வந்தார். ஆனால், கடந்த ஒரு மாத காலமாக பதில் அதிகாரி கூட இன்றி கணக்காய்வு திணைக்களம் முடங்கியுள்ளது.

அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்த தர்மப்பிரிய கம்மன்பிலவின் பெயரைப் பரிந்துரைக்க ஜனாதிபதி தயக்கம் காட்டி வருகிறார். மாறாக, தகுதி குறைந்தவர்களின் பெயர்களை ஜனாதிபதி அனுப்பி வைத்ததால் அரசியலமைப்பு பேரவை அவற்றை நிராகரித்துள்ளது.

கணக்காய்வாளர் நாயகம் இல்லாததால், பொதுக் கணக்குக் குழு (COPA) மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) ஆகியவற்றின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

முறையான கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியமை மற்றும் அதனால் ஏற்படும் நிதிச் சீர்கேடுகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி ஆகியவற்றிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

நாட்டின் நிதி ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்குத் தகுதியான ஒருவரை உடனடியாக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

 

 

 

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...