07
இந்தியாசெய்திகள்

கணவன்-மனைவி விவகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை: நடிகர் விஜய்யின் விவாகரத்து குறித்து குஷ்பு அதிரடி!

Share

நடிகர் விஜய்யின் விவாகரத்து தொடர்பான செய்திகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர், “கணவன்-மனைவி இடையில் இருக்கும் பிரச்சினை பற்றி பேச நாம் யாருக்கும் உரிமை இல்லை” என அதிரடியாகக் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுடன் ஒப்பிடக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு எதிராக, அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாக வெளியான தகவல்கள் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பேசிய குஷ்பு, “தனிப்பட்ட வாழ்க்கையில் யாருக்கும் என்ன பிரச்சினை வேண்டுமானாலும் இருக்கலாம். அதைப் பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் உரிமையில்லை” எனத் தெரிவித்தார். விஜய்யின் விவாகரத்து மனு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...