பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இந்த அரசாங்கம் பெண்களை வெளிப்படையாகவே புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டை நாடாளுமன்ற உரையின் போது முன்வைத்துள்ளார்.
அதாவது‚ “கூட்டு எதிர்கட்சியில் அங்கம் வகித்த 53 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 52 பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தன்னை மட்டும் நாடாளுமன்றத்தின் பின் வரிசையில் அமர்த்தினர்.” என்றார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்‚ கட்சி விட்டு கட்சி என பலர் தாவியபோது கூட நான் அவ்வாறு செய்யாது கட்சியிலேயே இருந்தேன் ஆனால் எனக்கான அங்கிகாரத்தை அவமதித்துள்ளனர் என கடுமையாக விமர்சித்தார்.
ஆகவே, இதன் மூலம் பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்‚ அவர்களின் அங்கிகாரம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது‚ பாலின சமத்துவத்தை இந்த அரசாங்கம் எவ்வாறு அவமதிக்கிறது என்பது புலனாகின்றது என குறிப்பிட்டார்.
#SriLankaNews