கோலியின் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் – இளைஞன் கைது

koli

koli

கோலியின் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞன் கைது.

இந்திய துடுப்பாட்ட வீரன் விராட் கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த 23 வயது இளைஞன் தெலுங்கானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

T 20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.

இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.

இந்தியா அணி அடுத்தடுத்து தோல்வியடைந்து வந்தது.

இதுகுறித்து, இந்திய வீரர் முகமது ஷமியை சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த விமர்சனங்களை கண்டித்து கேப்டன் விராட் கோலி, ஷமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, விராட் கோலியின் ஆதரவைத் தொடர்ந்து ட்விட்டரில் நபர் ஒருவர் கோலியின் 9 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, ட்விட்ரில் மிரட்டல் விடுத்தரை தேடும் பணியில் பொலிஸார் இறங்கினர்.

விசாரணையில், தெலுங்கானா மாநிலம் சங்கராரெட்டியைச் சேர்ந்த அகுபதினி ராம் நாகேஷ் (23) என்பவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

மேற்கொண்ட விசாரணையில், நாகேஷ் சங்கராரெட்டி நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

தேடப்பட்ட நிலையில், மும்பை பொலிஸார் நேற்று அதிகாலை கைது செய்தனர். அத்தோடு அவர் மீது வழக்கும் தாக்கல் செய்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#india

Exit mobile version