கொடிகாமம் உசன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று சிறிய ரக லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில், கிளிநொச்சி அம்பாள் குளத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் சுரேஷ்குமார் (வயது 40) என்பவர் உயிரிழந்துள்ளார்.
பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிறிய ரக லொறியுடன், அதன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றது என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a comment