சிறுநீரக செயலிழப்பு: இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 இலட்சம் பேர் உயிரிழப்பு – 7 கோடி மக்கள் நாள்பட்ட நோயால் அவதி!

kidney 2025 02 64c4dfaad03050762c0097e951e0a6ec 3x2 1

இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டரை இலட்சம் பேர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் 7 கோடி மக்கள் நாள்பட்ட சிறுநீரக நோயோடு வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், புகை பிடித்தல், மது அருந்துதல், சிறுநீரக தொற்றுகள், சிறுநீரக கற்கள், உடற்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்க விளைவு, உணவு நச்சுக்கள், புற்றுநோய் போன்றவை சிறுநீரகம் பாதிப்பதற்கான முக்கிய காரணங்களாக அமைகின்றன.

எனவே சிறுநீரகங்களை பாதுகாப்பதற்காக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version