கெரவலப்பிட்டிய மின் நிலையம் அமெரிக்காவுக்கு விற்றமைக்கு எதிர்ப்பு

கெரவலப்பிட்டிய மின் நிலையத்தினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக யாழ்ப்பாண மின்சார சபை தலைமையகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் 40 வீத பங்கினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

IMG 20211029 WA0036

இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியினரின் ஏற்பாட்டில் இலங்கையின் அனைத்து இடங்களிலும், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகங்களுக்கு முன்பாக இன்று கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பழைய பூங்காவி வீதியில் உள்ள இலங்கை மின்சார சபையின் தலைமை காரியத்திற்கு முன்பாகவும் போராட்டம் இடம்பெற்றது.

#SrilankaNews

Exit mobile version