மன்னார் பேசாலையில் 20 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேசாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டடது
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில், மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி குமார பள்ளேவள மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ராமநாயக்க ஆகியோர் தலைமையிலான பொலிசார் விரைந்து செயற்பட்டு கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபரான பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா, மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேசாலை பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment