ஹப்புத்தளை, ஹல்துமுல்ல பகுதியில் இன்று அதிகாலை ‘கெப்’ ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
பெல்மடுலையிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ‘கெப்’ரக வானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த ஐவரில் நால்வர் ஹல்துமுல்ல வைத்தியசாலையிலும், மேலும் ஒருவர் தியத்தலாவை வைத்தியசாலையிலும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் ஹல்துமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews