14
இந்தியாசெய்திகள்

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ட குடும்பங்களுக்கு முக்கிய தகவல்

Share

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான பள்ளி, கல்லூரிச் செலவுகளை ஏற்கவும், எங்கள் குழுமத்தில் வேலை வாய்ப்பை வழங்கவும், ஆயுள் காப்பீடு செய்யவும் தயாராக இருப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள பதிவில்,

அன்பான வணக்கம், “கரூர் துயர சம்பவம் இன்றும் என் இதயத்தை கடைந்துகொண்டே இருக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு ஈடாக நாம் எதையும் செய்துவிட முடியாது. ஆனால் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற துணைநிற்க முடியும்.

அந்த வகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான பள்ளி, கல்லூரிச் செலவுகளை ஏற்கவும், எங்கள் குழுமத்தில் வேலை வாய்ப்பை வழங்கவும், ஆயுள் காப்பீடு செய்யவும் நான் தயாராக இருக்கிறேன்.

காயம்பட்ட இதயங்களுக்கு களிம்பு தடவும் என்னுடைய சிறு முயற்சி இது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன...

24
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு...

23
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவி உள்ள ஆபத்தான நபர்! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக்...

22
இந்தியாசெய்திகள்

ஆட்டத்தை ஆரம்பித்த திமுக – தவெக பொதுச் செயலாளரை கைது செய்ய தனிப்படை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர்...