இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளைத் தெரிவு மாவிட்டபுரத்தில் நேற்று (அக்21) நடைபெற்றது.
நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதிய நிர்வாகத் தெரிவின்படி, காங்கேசன்துறை தொகுதிக் கிளையின் முக்கியப் பொறுப்பாளர்கள் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டனர்:
தலைவர்: வலி வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்
உப தலைவர்: வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் தங்கராசா
செயலாளர்: வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் விஜயராஜ்
உப செயலாளர்: முன்னாள் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் மரியதாஸ்
பொருளாளர்: வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் உதயசங்கர்
மேலும், 21 வட்டாரங்களைக் கொண்ட வலி வடக்கில், நிர்வாக முக்கியப் பொறுப்புகளில் தெரிவு செய்யப்பட்டவர்களின் வட்டாரங்களைத் தவிர்த்து, ஏனைய வட்டாரங்களுக்குப் பொறுப்பாக ஒவ்வொருவர் தெரிவு செய்யப்பட்டனர்.
கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் இது குறித்துத் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நுண்கடன் பிரச்சினை முதலான நடைமுறை ரீதியான பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து மக்களுக்குச் சிறந்த பணியாற்றுவதே இந்தப் புதிய நிர்வாகத் தெரிவின் குறிக்கோள் என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.