தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டு வரும் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது இராஜினாமாக் கடிதத்தினை கையளித்துள்ளார்.
இதனையடுத்து எதிர்வரும் வாரத்திற்குள் வடமாகாண ஆளுநராக கடமைகளை ஜீவன் தியாகராஜா பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுதந்தர தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுக்கொண்டிருந்த ஜீவன் தியாகராஜாவை அப் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு கோரிய கடிமொன்றினை அனுப்பி வைத்திருந்தார்.
அந்தக் கடிதத்தில் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனம் தொடர்பான விடயமும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இறுதியாகப் பங்கேற்ற ஜீவன் தியாகராஜா, தற்போது தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் அவர் விரைவில் வடக்கு மாகாண ஆளுநருக்கான பொறுப்பை ஏற்பார் என அரசியல் வட்டராங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
Leave a comment