வடக்கின் ஆளுநராக ஜீவன்?

JeewanThyagarajah

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா, நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் இப் பதவிக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவால் இவ் விடயம் தொடர்பில் ஜீவன் தியாகராஜாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியை விரைவில் அவர் இராஜினமா செய்வார் என்றும் அறிய முடிகிறது.

Exit mobile version