அமைச்சுப் பதவியைத் துறந்து அதிரடி காட்டிய ஜயந்த சமரவீர!

ஜயந்த சமரவீர

தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர, தான் வகித்த அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

இது தொடர்பான பதவி துறப்புக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று அவர் அனுப்பியுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச, அண்மையில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையிலேயே அவரின் கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சுப் பதவியை வகித்த ஜயந்த சமரவீரவும் பதவி விலகியுள்ளார்.

தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்று உட்பட தேசிய சுதந்திர முன்னணியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version