மீண்டும் எம்.பியானார் ஜயந்த கெட்டகொட!

jayamntha 1 720x375 1

மீண்டும் எம்.பியானார் ஜயந்த கெட்டகொட!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார் .

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரல் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமாக காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 2000ஆம் ஆண்டு முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

மீண்டும் 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் அமைச்சர் பஸில் ராஜபக்ச தேசிய பட்டியலூடாக நாடாளுமன்றத்துக்கு செல்வதற்காக தனது பதவியை ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version