ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, சீனா தாய்வானை தாக்கினால் ஜப்பானும் அமெரிக்காவும் பொறுமை காக்காது என்பதை பீஜிங் புரிந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தேசிய கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிலேயே இவர் இதனை தெரிவித்தார்.
தாய்வானுக்கான ஆயுத படையெடுப்பு ஜப்பானுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்பதையும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
அமைதியை விரும்புவதாக தெரிவிக்கும் தாய்வான் அரசாங்கம் தேவைப்பட்டால் தன்னை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்துள்ளது.
#WorldNews