யாழில் ஆட்டத்தை ஆரம்பித்தார் கீதநாத் 1
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

யாழில் ஆட்டத்தை ஆரம்பித்தார் கீதநாத்!

Share

“யாழ்ப்பாணம் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை உடனடியாகக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவும்.”

– இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசனுக்கு, பிரதமர் அலுவலகத்திலிருந்து நேற்றுக் கடிதம் அவசர அவசரமாக அனுப்பப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவுக்கு பிரதமர் அலுவலகப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீதநாத் காசிலிங்கத்தின் ஒப்பத்துடன் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத்திட்டத்தின் பிரகாரமும் 2022ஆம் ஆண்டுக்கான அரசின் வரவு – செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தி உச்ச பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்காகவும் 2022ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டங்களின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை கிரமமாக நடத்துவதற்கான முக்கியத்துவத்தின் பால் தங்களின் மேலான கவனத்தை ஈர்க்கின்றேன்.

அதன் அடிப்படையில் 2022ஆம் ஆண்டிற்கான நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்களுக்;கு ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதி பெறுவதற்காக பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்கு ஆவன செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

# SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...