அவிசாவளை, புவக்பிட்டிய தும்மோதர குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நேற்றையதினம் நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன மூவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக திடீரென நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நீர்வீழ்ச்சியில் நீராடிக்கொண்டிருந்த ஆறு பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று நபர்களை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர்.
நேரில் அடித்துச்செல்லப்பட்டோரில் ஒரு யுவதியும் இரண்டு சிறுமிகளும் காணப்படுகின்றனர்.
தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தேடுதலைத் தொடர்ந்து, இரவு 11 மணியளவில் சிறுமி ஒருவரின் சடலம் நீர்வீழ்ச்சியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்த சிறுமி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 16 வயதுடைய எக்மன் தேவதாஸ் இஷாரா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், காணாமல் போயுள்ள இருவரையும் தேடும் பணி தொடர்கின்றது.
#SrilankaNews
Leave a comment