யாழ் மாவட்ட செயலகம் 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
அத்தோடு பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் பங்குகொண்ட 14 பிரதேச செயலகங்களும் வெற்றியீட்டியுள்ளன.
பொதுமக்கள் சேவை வழங்கலில் சிறந்து விளங்கியமைக்கான அங்கீகாரமாக இதனை கருதுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
இனிவரும் காலங்களிலும் அரச திணைக்களங்கள் வினைத்திறனாக சேவையாற்றும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை இப்போட்டித் தொடரில் கடந்த 2016 ஆம் ஆண்டு 3 ஆம் இடத்தையும், 2018 ஆம் ஆண்டு 2 ஆவது இடத்தையும் யாழ் மாவட்ட செயலகம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment