பொதுமக்களுக்கு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை!

Suryaraj

கடந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 20 . 6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதிகூடிய மழைவீழ்ச்சியாக நயினாதீவுப் பகுதியில் 80.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது.

அதேவேளை அச்சுவேலியில் 26.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது.

எனினும் இதுவரை பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் எதுவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு கிடைக்கவில்லை என்றார்.

வங்காள விரிகுடாவின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதோடு, மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

எனவே பொதுமக்கள் தங்களையும் தங்களது உடமைகளையும் குறித்த காலப்பகுதியில் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.


#SrilankaNews

Exit mobile version