மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வீதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்திலிருந்து கல்லுண்டாய் வீதியூடாக சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி கல்லுண்டாய் வைரவர் கோவிலடியில் திரும்பும் போது குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment