இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்! – வளிமண்டலவியல் திணைக்களம்

Rain 10

இன்று வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

குறித்த அறிவிப்பில், நாட்டிற்கு அண்மையாக கீழ் வளிமண்டலத்தில் விருத்தியடையும் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழை நிலைமை நாளையிலிருந்து (23ஆம் திகதி) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version