‘அனைத்து மதங்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றிய போதே பிரதமர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில், அரசியலமைப்புக்கு அமைய நாட்டிலுள்ள அனைத்து மதங்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை.
இதன்படி அனைத்து மத வழிபாட்டு தலங்களை மேம்படுத்தவும், ஒழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்பவும் பல்வேறு திட்டங்களை புத்த சாசன, மத விவகார, கலாசார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது என்றும் தெரிவித்தார்.
#SriLankaNews