6 மாதக் காலப்பகுதிக்கோ அல்லது ஒரு வருட காலப் பகுதிக்கோ உள்ளூராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்படலாம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
அரசாங்கம் இன்றைய கள சூழலில் புதிய தேர்தலை நடத்தாது.
இக்கால சூழலில் உள்ளூராட்சி சபைகள் தோற்கடிக்கப்பட்டு ஆங்காங்கு ஆணையாளர்களின் கீழ் சபைகள் கொண்டு வரப்படுமாயின், அதனைப்போல ஓர் மோசமான நிலை இருக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருப்பது நல்லது.
இன்று ஆளுநர்களின் செயற்பாடுகளை பார்க்கின்றோம். வடக்கு மாகாண சபை காணப்படுமாயின் இந்நிலை ஏற்பட்டிருக்காது.
அதேபோல உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படுமாயின் அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு நாம் களம் அமைத்து கொடுத்தவர்களாவோம்.
#SriLankaNews