ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு இஸ்ரேலிய பிரதமர்பயணமாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய பிரதமர் நப்டாலி பெனட் முதன்முறையாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் ஒருவர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவென என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலிய உயர்மட்ட குழுவொன்றுடன் இன்று அங்கு விஜயம் செய்யும் இஸ்ரேலிய பிரதமர், முடிக்குரிய இளவரசர் சேக் மொஹமட் பின் சாயிட்டை நாளை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பானது மிக முக்கியம் வாய்ந்ததாக அமையுமென ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
#world
Leave a comment