” நல்லாட்சியின்போது நான் தனிமைப்படுத்தப்பட்டேன். எனது கட்சி அமைச்சர்கள்கூட ரணிலுடன் உறவாடினர்.” – என்று கவலை வெளியிட்டுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இதரக்கட்சிகள் இணைந்து நல்லாட்சியைக் குழப்பின. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 அமைச்சர்கள் இருந்தனர். அவர்களில் சிலர் ரணிலுடன் உறவு வைத்திருந்தனர்.
இதனால் எனக்கென அமைச்சரவையொன்று இருக்கவில்லை, நாடாளுமன்றம் இருக்கவில்லை. எதிரணிகூட ஆளுந்தரப்புக்கு சார்பாகவே செயற்பட்டது.
இன்று ஐக்கிய தேசியக் கட்சி காணாமல்போய்விட்டது. மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் – அவர்களுக்கு சிறந்த சூழலை உருவாக்காமல் முன்னோக்கி செல்ல முடியாது.” – என்றார்.
#SriLankaNews