உரம் விநியோகம் இராணுவத்தினரால் என்றால் நாட்டில் விவசாய அமைச்சரோ, உர அமைச்சரோ எதற்காக என எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று (9) புந்தல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், உரத்தை விநியோகிக்க முடியாத அரசாங்கம் அதனை இராணுவத் தளபதியிடம் ஒப்படைத்துள்ளது.
இதன்மூலம் விவசாய அமைச்சர் , உர அமைச்சர்களின் தோல்வியை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.
அரசாங்க ஊழியர்கள் மீது அரசுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நாங்கள் முழுமையாக நம்புகின்றோம் .
விவசாயத்தில் மாற்றம் ஏற்பட அரசு இவ்வாறு செயற்படுவதை ஏற்கமுடியாது. நாட்டில் பஞ்சம் நிலவ வாய்ப்புண்டு.எனவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment